டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம்-முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.சமீபத்தில் டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்,டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம்’என்று அறிவித்துள்ளார்.மேலும் 200 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 50 % மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025