டெல்லியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு.
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி டெல்லி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஏப்ரல் 12 ம் தேதி டெல்லி அரசு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்தது, அவை இப்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருடாந்திர மற்றும் இடைக்கால தேர்வுகளை நடத்திய தனியார் பள்ளிகள், அவர்கள் நடத்திய தேர்வின் அடிப்படையில் முடிவை அறிவிப்பதன் மூலம் தங்கள் மாணவர்களை மேலும் ஊக்குவிக்க முடியும்.
இருப்பினும், இடைக்கால தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்ட மற்றும் வருடாந்திர தேர்வுகளை நடத்த முடியாத அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடைக்கால தேர்வுகளின் அடிப்படையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை அறிவிக்கும் என்றும் துணை முதல்வர் கூறியுள்ளார்.
இடைக்கால தேர்வுகள் கூட நடத்தப்படாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2 பாடங்களின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தள்ளார். டெல்லி அரசு பள்ளிகளின் 9 மற்றும் 11 வகுப்புகளின் முடிவுகள் ஜூன் 22, 2021 அன்று அறிவிக்கப்படும்.
மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க முடியும் என்றும், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் முடிவுகள் குறித்து தெரிவிக்கும்படி டெல்லி அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது என்றும் மணீஷ் கூறியுள்ளார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…