delhi high court warns [file image]
Arvind Kejriwal: கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரிய மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை.
கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் ஒருவாரமாக அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
இதையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் உள்ள 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. சுர்ஜித் சிங் யாதவ் மற்றும் விஷ்ணு குப்தா ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.
இதனைத்தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சந்தீப் குமார் என்பவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…