Categories: இந்தியா

டெல்லி சேவைகள் மசோதா! மக்களவையில் இன்று.. புதிய அமளிக்கு வாய்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லி உள்ள அரசு அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம், பதவிக்காலம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்டவை தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான ஒரு சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதன்படி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மாநில அரசின் அதிகாரம்  மத்திய அரசின் வசம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் சட்டத்துக்கு டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக எதிர்த்தது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க பல கட்சிகளின் ஆதரவையும் அக்கட்சி நாடி வந்தது.

இந்த சமயத்தில், டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சேவைகள் சோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த சட்டத்தையும் கொண்டு வரும் உரிமை அரசுக்கு இருப்பதாக வாதத்தில் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய மசோதா, டெல்லியின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஆதரவான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. டெல்லியில் துறைகள் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறும் வகையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி சேவைகள் மசோதா இன்று மக்களவையில் புதிய அமளியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த அவசரச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இருப்பினும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ராஜ்யசபா மற்றும் லோக்சபா இரண்டிலும் கணிசமான பிரதிநிதித்துவத்துடன், மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

21 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

55 minutes ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

1 hour ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago