மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதிக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தியை பீகார் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Rahul Gandhi in car

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் ‘சிக்ஷா நியாய் சம்வாத்’ என்ற திட்டத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்து, கட்சியின் மாநில அளவிலான பொதுக்கூட்ட நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து, காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்தே சென்று சந்தித்தார். பின்னர், நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, “பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் ‘இரட்டை இயந்திர ஏமாற்றுக்காரர் அரசாங்கம்’ அம்பேத்கர் விடுதியில் உள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடன் நான் தொடர்பு கொள்வதைத் தடுக்கிறது.

எப்போதிலிருந்து உரையாடல் ஒரு குற்றமாக மாறியது? நிதிஷ் ஜி, நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்? பீகாரில் கல்வி மற்றும் சமூக நீதியின் நிலையை மறைக்க விரும்புகிறீர்களா?” என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, “இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல, சமூக நீதி மற்றும் கல்விக்காக நாங்கள் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. பீகார் காவல்துறை என்னைத் தடுக்க முயன்றது, ஆனால் நாட்டின் இளைஞர்கள் என் பின்னால் இருப்பதால் முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்