மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந்தேதி டெல்லி வடகிழக்கு பகுதியில் போராட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர். அப்போது போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தனர்.மேலும் சாலைகளில் இருந்த வாகனங்கள் , டயர்களை எரித்தனர்.
வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 30 ஆக இருந்த நிலையில் இன்று 34 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வன்முறை பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் டெல்லி வன்முறை தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை குடியரசு தலைவரிடம் அளிக்கின்றனர்.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…