டெல்லி கொரோனாவின் மூன்றாம் அலையை வென்றுவிட்டது – டெல்லி முதல்வர்!

மக்களின் முயற்சியாலும், ஒத்துழைப்பாலும் டெல்லி கொரோனாவின் மூன்றாம் அலையை வென்றுவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் குறைந்து கொண்டே தான் வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக மக்கள் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இது ஆட்டின் மூன்றாவது கொரோனா அலையாக இருக்கலாம் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் தற்பொழுது கொரோனாவின் மூன்றாம் அலை குறைந்து வருகிறது. தினமும் டெல்லியில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம், இது அமெரிக்காவை விடவும் அதிகம் என கூறிய அவர், டெல்லி மக்களின் முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் கொரோனாவின் மூன்றாம் அலையை டெல்லி வென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025