“இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” -பிரதமர் மோடி!

இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அசோசம் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, நேற்று நடந்த அசோசம் அமைப்பின் கூட்டத்தில் வல்லுநர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்பொழுது பேசிய அவர், கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடுகளை இந்தியா அதிக அளவில் ஈர்த்துள்ளதால்பல நாடுகளுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டதாக கூறிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள்ள நிலையில், இந்தியா புதிய பல அந்நிய முதலீடுகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும் எனவும், இந்தியாவை தொழில் புரட்சியின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துவதற்கு தொழில்துறையினர் உதவ வேண்டும் என அந்த உரையில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025