உள்ளூர் குடியிருப்பு சான்று மற்றும் ஆதாரம் இல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுவது தவறு என உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் மக்கள் கொரோனாவால் உயிர் இழப்பதை விட மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்பது தான் தற்பொழுது அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், சில இடங்களில் உள்ளூர் குடியிருப்பு அல்லது அடையாள சான்றிதழ் இருந்தால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இரண்டு வாரங்களுக்குள் மருத்துவமனைமருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்ப்பது தொடர்பான தேசிய கொள்கைகளை வைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
மேலும் அனைத்து மாநில அரசுகளும் எந்த ஒரு நோயாளிக்கும் உள்ளூர் குடியிருப்பு அல்லது ஆதாரங்கள் கேட்டு மருத்துவமனைகளில் மருந்துகள் அல்லது படுக்கை வசதிகளை மறுக்கக் கூடாது எனவும் அனைவருக்கும் சமமாக மருத்துவமனைகளில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில், மாநில அரசுகளுடன் சேர்ந்து எதிர்பாராத சூழ்நிலையில் கூட ஆக்சிஜன் முறையாக கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும் எனவும், ஆம்புலன்ஸ் வசதிகள் கூட சாமானிய மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் இன்று இரவுக்குள் முறையாக ஆக்சிஜன் கிடைக்க ஒரு முறையான வழிவகை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதாரப்பணியாளர்கள் இரவிலும் பகலிலும் ஓயாமல் உழைப்பதாகவும் அவர்களின் நல்வாழ்வுக்கும் ஏதேனும் ஒரு அவசர நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…