கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிக – ஐ.சி.எம்.ஆர்

நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நேரடி தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள் போன்ற நபர்களிடம் இத்தைகையை நோய் எதிர்ப்பு திறன் தானாகவே உருவாகி இருக்கலாம் என்பதாலும் அவற்றை சோதனை செய்யும் பட்சத்தில் வைரஸ் பரவலை தடுக்க புதிய வழிமுறைகளை கண்டறியலாம் என்பதற்காகவும் இத்தகையை பரிசோதனைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நோய் எதிர்ப்பு பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலும், தயக்கம் இருந்தாலும் ஐசிஎம்ஆர்யை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. அதற்காக அனைத்து உதவிகளும் வழங்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சார்ஸ் நோய் ஏற்பட்டபோது இத்தகையை நோய் எதிர்ப்பு திறன் பரிசோதனை முறை கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025