#BREAKING : போதிய பெரும்பான்மை இல்லை -ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிசு அறிவிப்பு

Published by
Venu

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிசு ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி  முன்பதவியேற்றனர்.
இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும்  சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  மீதான நடைபெற்ற விசாரணையில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.அதாவது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இவரை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர்  கூறுகையில், போதிய பெரும்பான்மை இல்லாததால்  முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.மேலும்  பாஜக-சிவசேனா கூட்டணிக்கே மகாராஷ்டிர மக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகளில் மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது.இடங்களின் எண்ணிக்கையை பார்த்த பிறகு பேரம் பேசத்தொடங்கியது சிவசேனா .சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவிற்கு அளிக்கப்படவில்லை.மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது என்று விளக்கம் அளித்தார்.
 

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago