லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற இந்திய,சீனவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம். சீன தரப்பில் ஏற்பட்ட உயிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக சீனா அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக பதட்டம் தணிந்து வருகிறது. சமீபத்தில், சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த வெர்சுவல் பாஜக பேரணியில் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தகவலைப் பாதுகாக்க சீனாவின் ஆப்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், இது ஒரு டிஜிட்டல் ஸ்டிரைக், இந்தியா அமைதியை விரும்பும் நாடு, யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…