26 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்களில் இரண்டு பெண்களை மணந்து பின்னர் தப்பிச் சென்றதாக புகார்.
மத்திய பிரதேசம் கண்ட்வாவில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய ஆய்வாளர் பி.எல் மாண்ட்லோய் தெரிவித்துள்ளார். இந்தூர், முசாகேடி பகுதியை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், டிசம்பர் 2-ஆம் தேதி காண்ட்வாவில் ஒரு பெண்ணையும், டிசம்பர் 7-ஆம் தேதி இந்தூரில் உள்ள மோவ் என்ற இடத்தில் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தூரில் திருமண விருந்துக்குச் சென்ற காண்ட்வாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர், ஐந்து நாட்களில் முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றச்சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காண்ட்வா பெண்ணின் குடும்பத்தினர் போலீஸ் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், குடும்பம் மணமகனுக்கு வழங்கப்பட்ட திருமணம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக ரூ.10 லட்சம் செலவாகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர், பெண்ணை திருமணம் செய்த பின்னர், இந்தூரில் உள்ள தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு வேலைகளுக்காக அவர் போபாலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மோவ் சென்றுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளனர். டிசம்பர் 2ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரி மற்றும் பிற உறவினர்களுடன் இங்கு திருமணத்திற்கு வந்திருந்தார் கூறியுள்ளனர்.
இந்தூரில் திருமணம் செய்துகொண்ட பெண்ணுடன், காண்ட்வாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பேசியபோது, தனது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கட்டாயப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 7 க்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மென்பொருள் பொறியாளர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளியை காவல்துறை தேடி வருவதாகவும் ககுறிப்பிட்டுள்ளார்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…