முதல்வர் பதவி பகிர்வு..! அதைப்பற்றி பேச போவதில்லை – டிகே சிவகுமார் பதில்!

அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி பேச போவதில்லை என டிகே சிவகுமார் பதில்.
யார் வேண்டுமானாலும் எதையாவது பேசட்டும், நான் அதை பற்றி பேசப் போவதில்லை என முதல்வர் பதவி பகிர்வு குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் பதிலளித்துள்ளார். முதல் 30 மாதம் சித்தராமையாவும், அடுத்த 30 மாதம் டிகே சிவகுமாரும் முதலமைச்சராக இருப்பார்கள் என தகவல் வெளியானது.
பதவி பகிர்வு என்ற திட்டப்படியே முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டைட் சிவகுமாரும் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்பட்டது. இந்த சமயத்தில், சித்தராமையா 5 ஆண்டுகள் கர்நாடக முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியதால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி பேச போவதில்லை என டிகே சிவகுமார் பதில் அளித்தார். மேலும், பதவி உள்ளிட்ட கட்சி பிரச்சனைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கவனித்து கொள்ளும் என்றும் கர்நாடகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதே தங்கள் முன்னுரிமை பணி எனவும் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025