ஆந்திராவில் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கம்.!

Published by
Dinasuvadu desk

ஆந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக குறையாததால் 4 கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுப்போக்குவரத்து சேவை , அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்தும், ஒத்திவைத்தும் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இதுவரை 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  1621 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 52 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இந்நிலையில், ஆந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில்லாத மண்டலங்களில் முதல் கட்டமாக 1,683 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்ததாக நேற்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

15 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

57 minutes ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

4 hours ago