சாமி கும்பிட சென்ற ஆனந்த் அம்பானி.. கவனத்தை ஈர்த்த வாட்ச்.! எத்தனை கோடி தெரியுமா.?

Anant Ambani - luxury watch

ஆனந்த் அம்பானி : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். திருமண விழாக்கள் ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த மங்கள நிகழ்ச்சியை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம், நெரலில் உள்ள கிருஷ்ண காளி கோவிலுக்கு ஆனந்த் அம்பானி நேற்று சென்றார். அங்கு தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என ஹவானி விழா நடத்தி, சாமியை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக ஆனந்த் அம்பானி அணிந்திருந்த லக்சரி வாட்ச் இணையத்தில் வைரலாக தொடங்கியது. அதன் விலைகேட்டா ஆடி போய்டுவிங்க.. ஆனந்த் அம்பானி ஏற்கனவே, பச்சை நிறம் கொண்ட “ரிச்சர்ட் மில்லே” என்ற பிராண்ட் வாட்ச்சை அணிந்திருப்பார்.

Anant Ambani wears a luxury watch
Anant Ambani wears a luxury watch [Image – The Siasat Daily]
இப்போது, கோவில் தரிசனத்திற்கு மற்றொரு ரிச்சர்ட் மில்லே வாட்சை அணிந்து சென்றுள்ளார். இதன் விலையானது ரூ.6.91 கோடி ( 828,000 அமெரிக்க டாலர்) ஆகும். திருமணத்திற்க்கு முந்தைய ப்ரீ வெட்டிங் விழா, ஜூன் மாத தொடக்கத்தில் இத்தாலியில் ஒரு ஆடம்பரமான பயணத்தில் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்