30 வயதான பெண் சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதைக் அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் பகுதியில் 30 வயது உடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார்.இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆணுடன் திருமணம் நடைபெற்றது.இதனிடையே கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேதாஜி புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர் ஆண் என்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஆனால் அவருக்கு பெண்களுக்குஉரிய உடல் உறுப்புகள் இருந்தது.குறிப்பாக குரலும் பெண்ணின் குரல் தான்.ஆனால் மரபணு ரீதியாக அவர் ஆணாக உள்ளார். இவருக்கு பிறப்பிலே கருப்பை கிடையாது. மேலும் மாதவிடாய் இதுவரை வந்தது இல்லையாம்.
மேலும் ஆண்களுக்கு ஏற்படும் டெஸ்டிகுலார் புற்றுநோய் தான் இவருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தான் அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் தத்தா கூறுகையில்,இது அதிசயமான நிகழ்வு ஆகும். இப்படி 22,000 பேரில் ஒருவருக்கு தான் வரும்.இவருக்கு ஆண்களுக்கு உள்ள XY குரோமோசோம்களே உள்ளது .இவருக்கு தற்போது கீமோ தெரபி அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…