ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை:
ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது யுபிஐ மோசடிக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடி கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.
எந்தவொரு கடிதமும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் உங்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறும் எந்த உடனடி கடன் செயலியையும் பயன்படுத்தவேண்டும் என கூறியது. பெரும்பாலும் மக்கள் உடனடி கடன் செயலி பயன்படுத்தியதால், உடனடி கடன் செயலி முலம் பெறப்படும் கடனுக்கு அளவுக்கதிகமான வட்டி வசூலிக்கப்பட்டதால் இதனால் வட்டி செலுத்த முடியாமல் சிலர் மன உளைச்சலில் மரணம் வரை சென்றதால் இந்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வழங்கியது.
இந்நிலையில், எஸ்பிஐ தனது ட்விட்டர் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதில், யுபிஐ பரிவர்த்தனை உங்களால் செய்யப்படாமல் பணத்தை டெபிட் செய்வதற்கான எஸ்எம்எஸ் கிடைத்தால், முதலில் யுபிஐ சேவையை நிறுத்துங்கள், யுபிஐ சேவையை மூடுவது குறித்து வங்கி தகவல்களை அளித்துள்ளது.
UPI சேவையை எவ்வாறு முடக்கலாம்:
யுபிஐ சேவையை நிறுத்த எஸ்பிஐ வங்கி சில குறிப்புகளை வழங்கியுள்ளது. அதில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் 1800111109 ஐ அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவையை நிறுத்தலாம். அல்லது ஐவிஆர் எண்ணை 1800-425-3800 / 1800-11-2211 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.
இது தவிர, https://cms.onlinesbi.sbi.com/cms/ என்ற முகவரியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அங்கேயே 9223008333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…