மாட்டு சிறுநீர் குடித்தால் கொரோனா பரவுவதை தடுக்கலாம்- குடித்து காட்டிய பாஜக எம்எல்ஏ!

Published by
Rebekal

கொரோனா பரவுவதை தடுக்க மாட்டு சிறுநீர் குடிப்பது நல்லது எனக் கூறிய உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் அவர்கள், மாட்டு சிறுநீர் குடிப்பதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கொரோனாவை ஒழிப்பதற்கான பல்வேறு வழிகளை தேடி வருகின்றனர். தடுப்பூசி போடுவது ஒரு வழியாக இருந்தாலும், இயற்கை வைத்தியம் மூலமாக கொரோனாவை ஒழிக்க முடியும் என பலர் நம்புகின்றனர் .குறிப்பாக சிலர் மாட்டின்  சிறுநீரகம் மூலமாகவும் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என கூறி வருகின்றனர். இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைரியா எனும் பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பவர் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு மாட்டு சிறுநீர் உதவும் என கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அவர் மாட்டு சிறுநீரை குடிப்பதையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மக்களுக்காக சேவை செய்த போதிலும், நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் மாட்டு சிறுநீர் தான் என கூறியுள்ளார். மேலும் இந்த மருந்தை உட்கொள்வதால் கொரோனா மட்டுமல்ல வேறு எந்த ஒரு இதய வியாதிகள் கூட நம்மை அண்டாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதை எப்படி குடிக்க வேண்டும் என்றால் மூன்று மூடி மாட்டு சிறுநீர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து அதை அப்படியே குடித்து விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இதை குடித்து அரை மணி நேரத்திற்கு எதுவும் உட்கொள்ள கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் இவர் பதஞ்சலியின் மாட்டு சிறுநீர் கொண்ட பாட்டிலில் இருந்து தான் இதை குடித்து காண்பித்துள்ளார். இது போன்ற பதஞ்சலியின் மாட்டு சிறுநீர் நேரடியாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்  ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மஞ்சள் தூளை லேசாக வறுத்து உட்கொள்ளுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

1 minute ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

18 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago