பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், தன் மகன் மரணத்தில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கிஷோர் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாட்னா போலீசாரும் விசாரணை மேற்கொண்டது. பின்னர், பாட்னா போலீசாரும் விசாரித்து வந்த நிலையில், சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, பீகார் அரசு பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டது. இதனால், சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், பாட்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா சக்ரபோர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், பாட்னாவில் ரியா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை சட்டபூர்வமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து தெரிய வந்துள்ளது.
அதில் , எம்.டி.எம்.ஏ , மரிஜுவானா மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரியா பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனால், ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உட்பட சிலர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பை விசாரணை குழுவுடன் சேர்ந்து, டில்லி குழுவும் விசாரிக்க உள்ளது. இதற்காக 3 பேர் கொண்ட குழு நாளை மும்பை செல்கின்றது. இந்த வழக்கில் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
ஆனால், ரியாவின் வழக்கறிஞர் ரியா போதை பொருளை பயன்படுத்தவில்லை.இதனை நிரூபிக்க ரியா ரத்த பரிசோதனைசெய்ய தயார் என கூறினார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…