கர்நாடகா தேர்தல் : எல்பிஜி சிலிண்டர் விலை அதிகரிப்பு.! காங்கிரஸ் கட்சியினர் நூதன எதிர்ப்பு.!

கர்நாடகா தேர்தல் நடைபெறும் வேளையில் எல்பிஜி சிலிண்டர் விலை அதிகரிப்பை வெளிக்காட்ட காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரம் வரையில் 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி இருந்தாலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் இந்த தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்த கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் புதுவிதமாக பாஜகவுக்கு எதிராக நூதன எதிர்ப்பு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதன் அருகே இறுதி சடங்குகள் போல குச்சிகளை எரித்தனர்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய அன்றாடப் பொருட்களி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் ஆளும் பாஜகவை விமரிஸ்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த நூதன எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Congress workers garland an LPG gas cylinder and burn incense sticks near it, in Bengaluru’s Rajarajeshwari Nagar area#KarnatakaAssemblyElection2023 pic.twitter.com/f3v8XBwswS
— ANI (@ANI) May 10, 2023