அழகிய தருணம்..’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ குறும்பட தம்பதியை கெளரவித்த ‘தல’ தோனி..வைரலாகும் வீடியோ.!!

Dhoni and TheElephantWhisperers team

ஆஸ்கர் வென்ற ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் அதன் இயக்குநர் கார்த்திகி ஆகியோரை தோனி இன்று சந்தித்துள்ளார். 

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கப்படவுள்ள நிலையில், வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ஆஸ்கர் வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் அதன் இயக்குநர் கார்த்திகி கோன்சாலவஸ் ஆகியோர் சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்தனர். தோனியை பார்த்த அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

பிறகு, தோனி அவர்களுக்குக்கு தனது மகளையும் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடைய பெயர் அச்சிடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியையும் வழங்கி கெளரவித்தார். இந்த அழகான தருணத்தின் வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்,  ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் குறும்பட பிரிவில் கலந்து கொண்டு ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்