கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் என்.ஆர்.சந்தோஷ் தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் என்.ஆர்.சந்தோஷ். கடந்த மே மாதம் 28ஆம் தேதி இவர் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த நாள் முதற்கொண்டு எடியூரப்பா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சந்தோஷம் அழைத்துச் சென்று வந்துள்ளார். இவர் பெங்களூரில் டாலர்ஸ் காலனியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் முதல்வர் எடியூரப்பாவுடன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நேற்று காலையும் எடியூரப்பா உடன் இணைந்து நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், நேற்று இரவு 7 மணி அளவில் சந்தோஷ் தனது வீட்டில் உள்ள அவரது அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக அவரை சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள எஸ்.எம்.எஸ் ராமையா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே நேற்று இரவு முதல்வர் எடியூரப்பா எம்.எஸ்.ராமையா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தோஷின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், சந்தோஷ் அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…