விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

TVK Vijay‌ in madurai

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்த விஜய் பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தார்.

அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், மதுரை விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தீவிர சோதனைகளுக்கு பிறகுதான் பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படி இருக்கையில், தவெக தலைவர் விஜயை பார்க்க வந்தவரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலரால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொண்டர் ஒருவர் சால்வையுடன் வந்த நிலையில், தாக்க வந்ததாக நினைத்து விஜய்யின்  பாதுகாவலர் திடீரென துப்பாக்கியை தலைமீது வைத்தார். அடுத்த உடனே, சால்வை அணிய வந்த தொண்டரை விஜய்யின் பவுன்சர்கள் தரதர தரதரவென இழுத்து சென்றனர்.

மேலும் அப்போது, மதுரை விமான நிலையத்தில் ரசிகர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் அவரது பவுன்சர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாகத் தெரிகிறது. நடிகர் விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களின் பொருட்களை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களின் பொருட்களை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்