இந்தியாவில் தற்போது, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.
இந்த புதிய சூழலியல் வரைவின்மீது மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை யை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.
அப்போது தான் கருத்துக்களை பொதுமக்கள் சரியாக கூறமுடியும் என்று கூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 30-ம் தேதி 10 நாட்களுக்குள் 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால், நீதிமாற்ற உத்தரவுப்படி மத்திய அரசு மொழிபெயர்ப்பு செய்யவில்லை, அதற்கான காலஅவகாசமும் கேட்கவில்லை இதனால், டோங்கட் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்பாக வருகின்ற 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுபட்டது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…