Categories: இந்தியா

5 மாநில தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்!

Published by
பாலா கலியமூர்த்தி

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியை சேர்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வியூகங்களை வகுத்து வருகிறது. இதுபோன்று, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்த பேச்சுவார்த்தையை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அதன்படி, இன்று பிற்பகல் 12 மணிக்கு 2 மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம். 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கனா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதுபோன்று, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதேபோல்,  ராஜஸ்தானிலும் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும், காங்கிரசின் தேசிய தலைமையின் தலையீடு காரணமாக ஆட்சி கவிழாமல் தொடர்கிறது.

மேலும், வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எஃப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5 மாநில அரசுகளின் பதவி காலமும் இந்தாண்டுடன் முடிவடைய உள்ளது. இந்த சமயத்தில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

15 minutes ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

2 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

4 hours ago