ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகன், சிங்கப்பூரில் உள்ள கேமிங் போர்ட்டலில் இருந்து கேமை பதிவிறக்கம் செய்து, கூடுதல் அம்சங்களைப் பெற ரூ.36 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் விளையாட்டுக்கு அடிமையான மகன், இணையதளத்தில் கேமை பதிவிறக்கம் செய்ததால், அவரது தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆக்ராவில் உள்ள சைபர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கேம் சிங்கப்பூரில் உள்ள கேமிங் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது தெரிவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆக்ரா போலீஸ் விசாரித்து வருவதாகவும், பணம் குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்ராவில் உள்ள ஹரிபர்வத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் தனது தந்தையின் செல்போனில் இருந்து ‘Battle Ground Game’ பதிவிறக்கம் செய்ததைத் தொடர்ந்து, ரூ.36 லட்சம் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தனது கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்பட்டதை அறிந்த சிறுவனின் தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். சிறுவன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதால், விளையாட்டின் கடைசி கட்டத்தை எட்டுவதற்காக ‘அதிநவீன ஆயுதங்களை’ வாங்குவதற்காக ரூ.36 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தியதாக கூறப்படுகிறது. UPI முறையில் பணம் செலுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து விளையாடி வந்த சிறுவன் கூடுதல் அம்சங்களுக்கு பெறுவதற்காக பணம் செலுத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பணத்தை திரும்ப பெற சைபர் செல் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், அத்தகைய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் தொலைவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. பணம் வரவு வைக்கப்பட்ட கணக்கை கண்டுபிடிக்க சைபர் போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற ஜவான் தனது UPI கட்டண விருப்பத்தை முடக்கியிருந்தால், அந்தத் தொகை பிடிக்கப்படாமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…