மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.
அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.
இதன் மூலம் புகார் அளித்தல்,ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல்,இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் போன்றவற்றை செய்ய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
ஆனால்,மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு எந்தவித பதிலையும் பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்ட்ராகிராம் பதிலளிக்காத நிலையில் இத்தகைய தளங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கைள் எடுக்கப்படலாம் என்றும்,அடுத்த 2 நாட்களில் தடை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் அடிபணிந்துள்ளது.
மேலும்,இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு,தேவையான மாற்றங்களை செய்ய உள்ளோம்.மேலும்,மக்கள் சுதந்திரமாகவும்,பாதுகாப்பாகவும் தங்கள் கருத்துகளை வெளியிட பேஸ்புக் உறுதியாக இருக்கும்”,என்று தெரிவித்தார்.
ஆனால்,தற்போது வரை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை புதிய விதிகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…