“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான கேள்விக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இவ்வாறு பதிளித்துள்ளார்.

Pahalgam Attack Farooq Abdullah

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்திற்கு தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் விரோதத்தை விரும்பினால் நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானைக் கடுமையாகக் கண்டித்து பேசிய அவர், பயங்கரவாதத்தை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி வருவதாக அவர் கூறினார். பயங்கரவாதம் உங்களையும் (பாகிஸ்தானையும்) எங்களையும் அழித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு ஆதரவளிப்போம் என்று நாங்கள் கூறியுள்ளோம், இதற்குப் பிறகு எங்களிடமிருந்து எந்த கேள்வியும் கேட்கப்படக்கூடாது. ‘பிரதமர் மோடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்றும் கூறியுள்ளார்.

பின்னர், பத்திரிகையாளர் பாகிஸ்தானின் அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த கேள்விக்கு, பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, “எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளது, அது அவர்களுக்கு முன்பே உள்ளது. வாஜ்பாய் ஜி, நான் அவருடன் போக்ரானுக்குச் சென்றபோது, ​​நாங்கள் அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.

இந்தியா யாரையும் முதலில் தாக்கியதில்லை, இது அனைத்தும் பாகிஸ்தானில் தொடங்கியது. நாம் எப்போதும் பதிலடியே கொடுத்துள்ளோம். இன்றும் கூட, அவர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்தாவிட்டால் நாங்கள் அதை (அணு ஆயுதங்களை) பயன்படுத்த மாட்டோம். ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தினால், நம்மிடமும் அது இருக்கிறது. கடவுள் ஒருபோதும் அத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்