பப்ஜிக்கு மாற்றாக கூகுள் பிளே ஸ்டோரில் வெளியானது FAUG கேம்!

Published by
பாலா கலியமூர்த்தி

பப்ஜிக்கு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த என்கோர் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃபாஜி (FAUG) கேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன செயலிகள் மற்றும் பிரபல கேமான பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றிருந்த பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அதேபோன்ற விளையாட்டான ஃபாஜி (FAU-G) என்ற கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பெங்களூருவை தலைமையக கொண்ட என்கோர் என்ற நிறுவனம் ஃபாஜி (FAU-G- Fearless and United Guards) கேமை வடிவமைத்துள்ளது. இந்த ஃபாஜி கேம் இந்திய இராணுவ வீரர்கள் எல்லையில் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு வடிவகைப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதை விளையாடுபவர்கள் நம்முடைய இராணுவ வீரர்களின் தியாகத்தை அறிந்துகொள்வார்கள் என்று நடிகர் அக்சய்குமார்  தெரிவித்திருந்தார். இதனால் ஃபாஜி கேம் மீது எதிர்பார்ப்பு எகிறியது.

அறிவிக்கப்பட்டபடி கடந்த அக்டோபர் மாதம் ஃபாஜி வெளியிடப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இதற்கான முன்பதிவு ஆரம்பித்தது. இதனை 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி பப்ஜிக்கு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த என்கோர் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃபாஜி (FAUG) கேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

3 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

6 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

7 hours ago