கேரளா: முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி.!

Kerala CM Oommen Chandy

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி திடீர் உடல் நிலையில் சரியில்லா காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரளாவில் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த முன்னாள் முதல்வவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி, வைரஸ் நிமோனியா காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் சாண்டி உம்மன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது மகன், “அப்பா வைரஸ் நிமோனியாவால் அவதி படுவதால் மருத்துவமனையில் இருக்கிறார். இப்போது, அவரை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், உங்கள் எல்லா பிரார்த்தனைகளையும் நாடுகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

உம்மன் சாண்டி 2019 ஆம் ஆண்டு முதல் தொண்டை சம்பந்தமான நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்