புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் நான்கு கிலோ புல்லட் தாலி எனும் அசைவ உணவு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிடுபவருக்கு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உணவகங்கள் தற்பொழுது களை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு பிரபல உணவகம் ஆகிய சிவ்ராஜ் எனும் உணவகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அதுல் என்பவர் களையிழந்த வியாபாரத்தை மீண்டும் புதுப்பிப்பதற்காக புல்லட் தாலி சேலஞ்ச் எனும் ஒரு புதுமையான போட்டியை அறிவித்துள்ளார். இதன்படி அசைவ உணவுகள் அடங்கிய நான்கு கிலோ மட்டன் மற்றும் மீன்கள் உடைய 12 வித உணவு அடங்கிய புல்லட் தாலி எனும் தட்டில் உள்ள உணவு முழுவதையும்ஒரு மணி நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு 1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பல அசைவ உணவுகள் நிறைந்து காணப்படும் இந்த ஒரு தாலியின் விலை மட்டும் 2,500 ரூபாயாம். இந்நிலையில், இவரது இந்த அறிவிப்பை ஏற்று இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பலரும் உணவகத்தில் குவிந்துள்ளனர். அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய சோம்நாத் என்பவர் இந்த சேலஞ்ச்சில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதாக ஹோட்டலின் உரிமையாளர் அதுல அவர்கள் தெரிவித்துள்ளார்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…