கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக பரவி வரும் நிலையில், மே 25ஆம் தேதி வரையில் பீகாரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை ஒழிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து, பீகார் மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு வருகிற 15-ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மே 25 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…