Categories: இந்தியா

G20 Summit : உச்சகட்ட பாதுகாப்பில் இரும்புக்கோட்டையாக மாறி வரும் தலைநகர் டெல்லி.! ஆட்டோ ரிக்ஷா முதல் ஆயுத கிடங்குகள் வரை…

Published by
மணிகண்டன்

உலகமே தற்போது உற்று நோக்கும் ஒரு மாநாடாக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைநகர் டெல்லியில்  நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு மாறி வருகிறது. இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே, 3 நாட்களுக்கு பல்வேறு ரயில்கள் ரத்து, பல்வேறு ரயில்கள் புறப்படும் இடம், சேரும் இடத்தில் மாற்றம். விமான சேவையில் மாற்றம் என பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கல்வி நிறுவனங்கள், தனியார், அரசு அலுவலகங்கள் ஆகியவை 10ஆம் தேதி வரையில்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாடகை ஆட்டோ ரிக்ஷா, கால் டாக்சி ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் தாங்கும் விடுதிக்கு மேல் டிரோன்கள் பறந்தால் அதனை தாக்கி அழிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடடில் பங்கேற்க வரும் உலக நாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து சிறப்பு பாதை வழியாக அவர்கள் தாங்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் அவர்கள் ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு அருகே தாங்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

ஜி20 மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் டெல்லியில்  பாரத் மண்டபத்திற்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட உள்ளனர். இதற்காக இந்த விடுதிகள் பலத்த பாதுகாப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் குருகிராம் பகுதிகளிலும் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் சில நாட்டு தலைவர்கள் தங்க வைக்கப்படஉள்ளனர்.

ஜி20 மாநாட்டிற்காக சுமார் 50 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற பாதுகாப்பு படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய 19 இடங்களில் தொலைநோக்கி மூலம் கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஏதேனும் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தால் கூட அதனை சமாளிக்க தலைவர்கள் தங்கும் இடத்தின் அருகே ஆயுதகிடங்குகள் ஒன்று தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.  பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமின்றி மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.  அதேபோல் பாரத் மண்டபத்திற்குள் அனுமதி பெற்று செல்லும் நபர்கள் கேமரா, குடை போன்ற இருபது வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

10 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

32 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

42 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

1 hour ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

2 hours ago