கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

கடை விரிச்சும் வியாபாரம் ஆகலையே என இபிஎஸ் கூட்டணி அழைப்பு பற்றி அமைச்சர் துரைமுருகன் விமர்சித்து பேசியுள்ளார்.

edappadi palanisamy durai murugan

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் (இபிஎஸ்) கூட்டணி அழைப்பு குறித்து கிண்டலான கருத்தை தெரிவித்தார். அடுத்த ஆண்டு  2026 நடைபெறவுள்ள  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனவே, இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், “எடப்பாடி பழனிசாமி கடையை விரித்துவிட்டு, ‘கூட்டணிக்கு வாங்க வாங்க’ என்று அழைக்கிறார். ஆனால், அவரது அழைப்பை ஏற்க யாருமே முன்வரவில்லை,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். எந்த விஷயத்தை பற்றி கேட்டாலும் அதற்கு நக்கலாக பதில் சொல்லும் அமைச்சர் துரைமுருகன் இந்த கேள்விக்கும் தன்னுடைய பாணியிலே பதிலை கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் , “திமுகவின் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகின்றன. இதனால், மக்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்தாலும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கடினம்,” என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், இதுவரை இபிஎஸ்-இன் அழைப்புக்கு எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஏனென்றால், தவெக, தனித்து செயல்படுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், நாதக தனது தனித்துவமான அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இபிஎஸ்-இன் கூட்டணி முயற்சிகள் பலவீனமாகக் கருதப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்