மகனை கொன்று தாயை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்.
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம், புக்ஸர் மாவட்டம், ஒஜாகா பரான் என்ற கிராமத்தை பெண் ஒருவர், தனது 6 வயது குழந்தையுடன், நேற்று பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த மர்ம கும்பல், அந்த பெண்ணையும், அவரது மகனையும் கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில், அப்பெண் மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதாற்காக, அவரது மகனின் கை, கால்களை கட்டி, மகனுடன் சேர்த்து, அப்பெண்ணையும் ஆற்றில் வீசியுள்ளனர். இதனையடுத்து, அப்பெண் சத்தமிட்டதை தொடர்ந்து, அருகில் இருந்த மக்கள் அப்பெண்ணை மீட்டனர். ஆனால், அவரது 6 வயது மகன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது மகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் இருந்த பெண்ணை, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அப்பெண் கொடுத்த புகாரையடுத்து, இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…