மேற்கு வங்கத்தில் மே 4 முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் தற்போது பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா வைரசை பேரிடராக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமானதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், ஊரடங்கு தளர்வு செய்யப்படுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது. பின்னர் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு வரும் மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட உணவிற்கு தவிக்கும் சூழல் நிலவியுள்ளது. கொரோனா பாதிப்பு ஒருபக்கம் உயர்ந்துகொண்டே செல்ல நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனை சரிக்கட்ட மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டது. அதன்படி, தங்களால் முடிந்த நிதியை பல்வேறு துறையை சார்ந்தவர்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கில் தளர்வு இருக்குமா அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மனதில் மறுபடியும் குழப்பம் நிலவி வருகிறது.
அதனபடி, சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மே 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்க்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்தும் சரியாக அமைந்தால் திங்கட்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளர்வு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மேற்கு வங்கத்தில் கொரோனாவால் 725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். 119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…