ராமர் கோவிலுக்கு ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தியை சென்றடைந்த ராட்சத மணி.!

சென்னையைச் சேர்ந்த சட்ட உரிமைகள் பேரவை ஒரு ராட்சத மணியை அளித்துள்ளது. இந்த மணியானது கடந்த செப்டம்பர் – 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து சென்ற ஒரு ராம் ரத யாத்திரை நேற்று அயோத்தியை சென்று அடைந்தது.
613 கிலோ எடை கொண்ட இந்த மணியானது 4 அடி உயரம் உள்ளது. இந்த பெரிய மணியில் ‘’ஜெய் ஸ்ரீ ராம்‘’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மணி ஒலிக்கும் போது, நகரத்தின் 10 கி.மீ சுற்றளவில் ஒலி கேட்கப்படும். மேலும், மணி ஒலிக்கும்பொழுது ‘ஓம்’ என எதிரொலிக்கும் படி விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 மாநிலங்களில் 4,500 கி.மீ தூரத்தில் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை ராம் ரத்தை ஓட்டிச் சென்ற ராஜ் லக்ஷ்மி மாதா வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் அனுமன் சிலைகளையும் எடுத்துச் சென்றார்.
இதனை, ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, மஹந்த் தினேந்திர தாஸ் மற்றும் விம்லேந்திர மிஸ்ரா ஆகியோரின் முன்னிலையில் ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயிடம் நேற்று மணி மற்றும் சிலைகள் வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025