ஞானவாபி வழக்கு – ஜூலை 26ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ள தடை!

ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை.
ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வு மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மசூதி தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட நிபுணர் குழு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி, கோயில் மீது கட்டப்பட்டுள்ளதா என்பதை அறிவியல் முறையில் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதிக்க கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் ஜூலை 26ம் தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.