ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் மோகனின் செயல்பாடுகள் அம்மாநில மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நாடு முமுவதும் அவருக்கு ஆதரவுகளை குவிந்து வருகின்றது.
அங்கு எதிர்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது கடந்த புதன் கிழமை அன்று அக்கட்சியின் எம்பியான ஜேசி திவாகர் ரெட்டி ஆளும்கட்சியின் இசைக்கு ஏற்றாற்போல ஆந்திர காவல்துறை நடனம் ஆடுகிறது.நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களை தங்களது காலணிகளை முத்தமிட செய்வோம் என்று ஆவேச வெளிப்பட தெரிவித்தார்.இது அம்மாநிலத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சலசலப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தான் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பியும்,முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கோரண்ட்லா மாதவ் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவரின் ஷீவை கையால் எடுத்து அதனை சுத்தம் செய்து துடைத்து அதற்கு முத்தமிட்டார்.
இந்த தகவல் அம்மாநிலத்தில் காட்டுத்தீயாக பரவியது.இது குறித்து கோரண்ட்லா மாதவ் தெரிவிக்கையில் காவல்துறையினரின் காலணிகள் இந்த நாட்டை காக்கும் பாதுகாக்கும் படை வீரர்களின் ஆயுதங்களாகவே பார்க்கிறேன்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி அளித்தால் நான் மீண்டும் காவல்துறையில் இணைந்து நாட்டு மக்களுக்காக பாடுபடுவன் என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.தெலுங்கு தேச எம்பியின் பேச்சுக்கு தனது செயல் மூலம் சம்பட்டி அடி கொடுத்துள்ளார் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…