11,52,000 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் -மத்திய அமைச்சர் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரயில்வே ஊழியர்களுக்கு78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எனவே 11,52,000 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்.கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழக்கி வருகிறது பாஜக அரசு என்றும் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.2000 கோடி செலவு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025