மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் நிலையில், இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், கை சுத்திகரிப்பான் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது தொடர்பாக, மேகாலய நிதியமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் மாநில நிதியமைச்சர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கேரளா, உத்தரபிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நிதியமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில், கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது தடுப்பூசிகளை பொறுத்தவரையில், 5% ஜிஎஸ்டி வரியும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் கொரோனாவுக்கான மருந்துகள் மீது 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…