பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்தது.இது குறித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அமைப்புசாரா பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST. GST, UPA அரசின் திட்டம் தான். ஒற்றை வரி,குறைந்த வரி,நியாயமான எளிய வரி. பாஜகவின் GST முற்றிலும் வித்தியாசமானது.4 விதமான வரி விதிப்பு,28% வரை வரி, கடினமான புரிந்து கொள்ள முடியாத வரி என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…