நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் முதல் அலையில், முதியவர்களை தான் அதிகமாக பாதித்தது. பின் இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரே பெரிதும் பாதித்தது. தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்று நோய் பொதுவாக பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை தான் ஏற்படுத்து. பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. இந்த கொடிய வைரஸில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறை தற்காப்பு நடவடிக்கைகள் தான் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 58 பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிதல், யோகா பயிற்சி, ஆயுர்வேத மருந்துகள் ஊட்டச்சத்து மருந்து மூலம் கொரோனாவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். பெற்றோர் தடுப்பூசி போடுவது ஆகியவை அந்த அறிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் வலுவானது. ஆனால் கொரோனா வைரஸ் பல பிரிவுகளாக உருவாகி வருவதால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க தொடர்பான அனைத்து நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை இதோ,
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…