குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம்.!

குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் 2015-ம் ஆண்டு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டேல் வகுப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்துள்ளனர். இந்த போராட்டங்களில் பல பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னிலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பின் இவர் அரசியல் தலைவராக உருவாக்கினார்.
ஹர்திக் பட்டேல் கடந்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதனால், குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் உடனடியாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025