உ.பி.யில் ஹத்ராஸ் வழக்கில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழு குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ஹத்ராஸில் ஒரு தலித் இளம் பெண் புல் வெட்டுவதற்காக சென்றார். அப்போது, சந்தீப், லாவ்குஷ், ரவி மற்றும் ராமு ஆகிய 4 உயர்சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் செப்டம்பர் 29 அன்று டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்திற்குப் பிறகு, அந்த பெண்ணின் உடலை டெல்லியில் இருந்து ஹத்ராஸ் கிராமத்திற்கு போலீசார் இரவில் கொண்டு வந்து குடும்பத்தினர் மறுத்த போதிலும், காவல்துறையினர் இறுதி சடங்குகளை இரவோடு இரவாக 2 மணிக்கு செய்தனர். சிறுமையின் உடலை எரிக்க போலீசார் பெட்ரோல் பயன்படுத்தினர்.
இதுகுறித்து பல வீடியோக்கள் வெளியாகியது. இதில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு கூட தனது மகளின் உடலை கடைசியாக பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்ற விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியின் மரணத்திற்குப் பிறகு நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உ.பி. காவல்துறை பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று கூறியது.
உ.பி. காவல்துறையின் இந்த அறிக்கையின் பின் உயர் நீதிமன்றமும் உ.பி. காவல்துறையை கண்டித்தது. வழக்கை சிறுமியின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என கோரியதையடுத்து இந்த வழக்கு சிபிஐ-கக்கு மாற்றப்பட்டது. ஏறக்குறைய மூன்று மாத விசாரணைக்குப் பிறகு, சிபிஐ இன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…