ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி, இந்தமாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.பாஜக கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ,அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜக மட்டும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.இங்கு ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
ஆளுநர் திரவுபதி முர்முர்வை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதமைச்சராக இன்று (டிசம்பர் 29-ஆம் தேதி )ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழா ராஞ்சி மோஹராபடி மைதானத்தில் நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரியங்கா,தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்,திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இதில் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…