சூடாக சப்பாத்தி தரவில்லை.. வெறியில் மாமியாரை கொன்ற மருமகன்..!

மத்திய பிரதேசத்தில் சூடாக சப்பாத்தி சுட்டுத்தரவில்லை என  மாமியாரை தடியால் அடித்து கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தில் சூடாக சப்பாத்தி சுட்டுத்தரவில்லை என  மாமியாரை தடியால் அடித்து கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், பிலோ கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.  35 வயதாகும் இவர், தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை, இவர் வேலை முடித்து நள்ளிரவில் வீடு திரும்பினார்.

அப்பொழுது 55 வயதாகும் அவரின் மாமியார், சுட்டு வைத்த சப்பாத்தியை தட்டில் வைத்துள்ளார். அதனை பார்த்து ஆத்திரமடைந்த சுரேஷ், சப்பாத்தி ஆறியதாகவும், தனக்கு சூடாக சப்பாத்தி சுட்டு தருமாறு மாமியாரிடம் கூறினார். ஆனால் ஏற்கனவே சுட்டு வைத்துள்ளதாகவும், புதிதாக சுட்டால் அது வீணாகிவிடும் என மாமியார் கூறி, சுட்டுத்தர மறுத்துள்ளார்.

இதனால் வெறியான அவர், அங்கு இருந்த தடியை எடுத்து மாமியாரின் மண்டையில் சரமாரியாக அடித்தார். இதனால் மண்டை பிளந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க, சுரேஷை கைது செய்தனர். மேலும், மாமியாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சூடாக சப்பாத்தி தரவில்லை.. வெறியில் மாமியாரை கொன்ற மருமகன்..!