கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் ஹைதராபாத்தில் உள்ள 30 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளில் 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,152 அரசு ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிலாக, வாக்கு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை முடிய கொஞ்சம் தாமதம் ஆனது. காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, இதில் பாஜக ஆளும் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றது.
இதனை தொடர்ந்து, நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் ஆளும் கட்சியான டிஆர்எஸ் இடையே தொடக்கத்திலிருந்தே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், சில வார்டுகளில் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும், பாஜகவுக்கும் இழுபறி நீடித்தது. மொத்தம் 150 வார்டுகளில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் வெற்றி பெற்றது. பாஜக 48 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இரண்டு வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது.கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…