நான் ஒரு சிறிய கட்சி, எனது தேவை யாருக்கும் இல்லை – குமாரசாமி

HD Kumaraswamy

நான் ஒரு சிறிய கட்சி, எனது தேவை யாருக்கும் இல்லை என்று ஜேடி(எஸ்) தலைவர் ஹெச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக முன்னாள் முதல்வரும், ஜேடி(எஸ்) தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி ஆட்சி அமைப்பது குறித்து இதுவரை தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தேசியக் கட்சிகளும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக் கணிப்புகள் ஜேடிஎஸ் 30-32 இடங்களில் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளது.

எனவே, நான் ஒரு சிறிய கட்சி, எனது தேவை யாருக்கும் இல்லை, நான் ஒரு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்